சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா சிறப்பு பூஜை
குன்னுார்; குன்னுார் அருவங்காடு சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழாவையொட்டி திருவீதி உலா நடந்தது.குன்னுார் அருகே, அருவங்காடு சித்தி விநாயகர் கோவிலில் ஆண்டு விழாவில், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, மஹா அபிஷேக ஆராதனை, தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. கோவிலில் துவங்கிய சுவாமி திருவீதி ஊர்வலம், அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை குடியிருப்புகள், மெயின் கேட் வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. தீபாராதனை மற்றும் பிரசாத வினியோகம் நடந்தது.இதை தொடர்ந்து, வரும், 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு அருவங்காடு நாட்டியா ஸ்கூல் ஆப் டான்ஸ் குழு, 11ம் தேதி மாலை 6.00 மணிக்கு அருவங்காடு கலைமகள் ஸ்கூல் ஆப் டான்ஸ் குழு, குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சித்தி விநாயகர் பஜனை மண்டல தலைவர், கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.