உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அர்ப்பணிப்பு இருந்தால் பாடகர்கள் கவரப்படுவர்!

அர்ப்பணிப்பு இருந்தால் பாடகர்கள் கவரப்படுவர்!

பாலக்காடு ;எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு இயற்கைப் பாடகர் என்று இசையமைப்பாளர் ஜெரி அமல்தேவ் தெரிவித்தார்.கேரளா மாநிலம், பாலக்காட்டை மையமாகக் கொண்டு, 'இன்சைட் தி கிரியேட்டிவ் குரூப்' என்ற பெயரில் படைப்பாற்றல் சமூகம் செயல்படுகிறது. இந்த சமூகம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஆவணப்பட விழா நடத்துவது வழக்கம். விழாவையொட்டி திரை உலகில் சாதனை படைத்தவர்களுக்கு விருதும் வழங்கப்படும்.நடப்பாண்டு விழா நேற்று பாலக்காடு லயன்ஸ் பள்ளி கலையரங்கில் நடந்தது. இந்த ஆண்டு விருது பிரபல இசை அமைப்பாளர் ஜெரிஅமல்தேவ்க்கு வழங்கப்பட்டது. விருதாக, 25 ஆயிரம் ரூபாயும், கவுரவ சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.நிருபர்களிடம் இசை அமைப்பாளர் ஜெரிஅமல்தேவ் கூறியதாவது:எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு இயற்கை பாடகர். முகமது ராபி, ஜானகி ஆகியோர், அவரைப் போன்றவர்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு திறமையான பாடகர். அவர் பணத்தை எதிர்பார்த்து பாடியது கிடையாது.இசையமைப்பாளர் என்ற கோணத்தில் பார்க்கும்போது, அது நன்றாக எனக்கு புரிந்து கொள்ள முடியும். ஒரு இசையமைப்பாளருக்கு பாடகனிடம் என்ன தேவையோ அதை முழுமையாக தர கூடியவர் எஸ்.பி.பி. அதேபோன்று தான் பாடகர் முகமது ராபியின் குணமும் உள்ளது.பாடகர்கள், பணத்தை எதிர்பார்க்காமல், இசைக்கு தங்களை அர்ப்பணித்தால், அனைவராலும் கவரப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ