உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையில் கொட்டப்பட்ட மண்; பொது மக்கள் நடமாட சிரமம்

சாலையில் கொட்டப்பட்ட மண்; பொது மக்கள் நடமாட சிரமம்

குன்னுார் : குன்னுார் ஓட்டு பட்டறை சாலையில் குழிகள் தோண்டப்பட்டு மண் சாலையில் கொட்டப்பட்டுள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.குன்னுார் ஓட்டு பட்டறை சாலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. அதில், தோண்டப்பட்ட மண் சாலையிலேயே கொட்டப்பட்டு உள்ளது. இவற்றை அகற்றாததால் வாகனப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போதும் பெய்யும் மழையால் சேறும் சகதியும் நிறைந்து மக்கள் நடமாட முடிவதில்லை.குறிப்பாக பழைய அருவங்காடு, சோகத்தொரை உள்ளிட்ட அரசு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதால் கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, அப்பகுதியில் உள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி