உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஐயப்பன் கோவிலில் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை

ஐயப்பன் கோவிலில் தீபம் ஏற்றி சிறப்பு பூஜை

பந்தலுார்;அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா நடந்த நிலையில், பந்தலுார் அருகே, பெக்கி பகுதி மக்கள், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.மேலும் இங்குள்ள ஐயப்பன் கோவிலில் கோவில் கமிட்டி தலைவர் ஸ்ரீதரன் தலைமையில், நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து, பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்று கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றிலும், 1,008 தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.அனைவரும் இணைந்து ராமர் பஜனை பாடி, அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகம் செய்யப்பட்ட நிகழ்வை மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.செயலாளர் சந்தோஷ் குமார், துணை தலைவர் சுரேந்திரன், துணை செயலாளர் ஜினாசந்திரன், பொருளாளர் ஷாம்பிரகாஷ் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்