மேலும் செய்திகள்
ஆதிங்கப்பட்டு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
18-Nov-2025
கூடலூர்: கூடலூர், கோழிக்கொல்லி பழங்குடி கிராம குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வனத்துறையினர் வழங்கினர். கூடலூர் புளியாம்பாறை அருகே உள்ள, கோழிக்கொல்லி பழங்குடி கிராமத்தில், கூடலூர் வன அலுவலர் உத்தரவுபடி, பழங்குடியின குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று, நடந்தது. நாடுகாணி வனச்சரகர் ரவி வரவேற்றார். விழா வுக்கு, உதவி வனபாதுகாவலர் துஷ்ரா சிண்டே தலைமை வகித்து பேசுகையில், 'குழந்தை பருவத்தில் விளையாட்டில் அதிகம் ஆர்வம் செலுத்துவதால் உடலும், மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். கல்வி, விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் அரசு வேலை வாய்ப்புகளை எளிதாக பெற முடியும்' என்றார். தொடர்ந்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கினர்.
18-Nov-2025