உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உபதலை அரசு பள்ளியில் விளையாட்டு விழா

உபதலை அரசு பள்ளியில் விளையாட்டு விழா

குன்னுார்:குன்னுார் அருகே உபதலை அரசு மேல்நிலை பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஐரின் ரெஜி தலைமை வகித்து, ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைத்து, உடல் நலம் மற்றும் மனநலம் மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து பேசினார்.மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், கால்பந்து, கபடி, ஹாக்கி, குண்டெறிதல், வட்டெறிதல், 100 மீ., முதல் 1500 மீ வரையிலான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.அதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அருவங்காடு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.,கள் சகாதேவன், லலிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் பிரகாசம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஏற்பாடுகளை விளையாட்டு ஆசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை