| ADDED : பிப் 22, 2024 11:22 PM
கோத்தகிரி:-கோத்தகிரி அரவேனு கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே உள்ள அருள்மிகு மகா கணபதி, ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கோத்தகிரி அரவேனு ஸ்ரீ வித்யா குருகுலம் சார்பில் நடந்த கும்பாபிஷேகத்தையொட்டி புனர்பூசம் நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில், காலை, 10:00 மணி முதல் 11:00 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது. அவினாசி ஆதீனம் ஸ்ரீ காமாட்சிதாஸ ஸ்வாமிகள், ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் ஸ்வாமி தேவானந்த சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. மலர் அலங்கார அபிஷேக வழிபாடு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ வித்யா குருகுலம் ஸ்ரீ லலிதாம்பிகா அறக்கட்டளையை சேர்ந்த ஸ்வாமி ஜகதாத்மானந்தா சரஸ்வதி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.