மேலும் செய்திகள்
மகாவிஷ்ணு கோவிலில் புத்தரி பூஜை கோலாகலம்
29-Oct-2025
பந்தலுார்: வயநாடன் செட்டி சமுதாய இளைய தலைமுறையினர், கல்வியில் மேம்பட்டு அரசு பணிகளை பெறுவதற்கான, பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பந்தலுார் அருகே பெக்கி பகுதியில், வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி, அலுவலக திறப்பு விழா மற்றும் சமுதாய மக்கள் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. சொசைட்டி கிளை தலைவர் ஜினயேந்திரன் வரவேற்றார். செயலாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்து கட்டடத்தை திறந்து வைத்தார். சொசைட்டியின், கேரளா மாநில செயலாளர் சதீஷ் கோவிந்த் பேசுகையில், ''பண்டைய காலங்களில் விவசாய மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் மட்டுமே, ஈடுபட்ட சமுதாய மக்கள் நாளடைவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதனை மேலும் மேம்படுத்தும் வகையில், கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள் மற்றும் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்தியில், கல்வியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களை அரசின் உயர் பதவிகள் பெறுவதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்படும்,'' என்றார். சொசைட்டி தமிழ்நாடு தலைவர் வேணுகோபால் பேசுகையில், ''கடந்த காலங்களில் கிராமங்களை ஆட்சி செய்யும் பொறுப்பாளர்களாக இருந்த சமுதாய பெரியவர்கள், மறைவிற்குப் பின்னர் இளைய தலைமுறைகள் சமுதாயத்தை மேம்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலை மாறவும் சமுதாயத்தை மேம்படுத்தி, நல்வழிப்படுத்தவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, நிர்வாகிகள் சண்முகம், விஜயன், ரமேஷ் உள்ளிட்ட பலர் பேசினர். தொடர்ந்து, அரசு பொது தேர்வுகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த சமுதாய மக்கள் பங்கேற்றனர்.
29-Oct-2025