மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
17 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
17 hour(s) ago
பந்தலுார் : பந்தலுார் பஜார் பகுதியில் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.பந்தலுார் பஜார் சாலை, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, குறுகி வருகிறது. சாலை ஓரங்களில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், தமிழகம், கேரளா பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள், இருமாநில அரசு பஸ்கள் வந்து செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது.இந்நிலையில், பகல் நேரங்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சாலையில் உலா வருவதால், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குவதுடன், பாதசாரிகளும் தெரு நாய்களின் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லைமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் தெரு நாய்களால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் முன்னர், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,' என்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago