உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் கைது

மஞ்சூர்; மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார் . நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே ஒரு தம்பதியின், 16 வயது மகள் பள்ளியில் படித்து வருகிறார். 26 வயது வாலிபர் மாணவி பள்ளிக்கு வரும் சமயங்களில் கிண்டல் செய்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து, மாணவி பள்ளி ஆசிரியர், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு 'போக்சோ' சட்டத்தில், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை