உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

 கலை நிகழ்ச்சியில் அசத்திய மாணவர்கள்

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை பள்ளி ஆண்டு விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் அசத்தினர். கூடலுார் தேவர்சோலை ஹோலிகிராஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியின், 42வது ஆண்டு விழா பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்தது. மேலாளர் வீவா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை நிஷா பப்பச்சன் தலைமை வகித்தார். விழாவில், கேரள மாநிலம் கோழிக்கோடு ஹோலிகிராஸ் கல்லுாரி முதல்வர் ஷைனிஜார்ஜ், கூடலுார் ஆர்.டி.ஓ., குணசேகரன் கல்வியின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் சாதித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியில் அசத்தினர். விழாவில் பி.டி.ஏ., தலைவர் சுதீஷ்குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியை பிரீடா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ