பொங்கல் விழாவில் அசத்திய மாணவர்கள்
கூடலுார் : கூடலுார் புனித தாமஸ் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், மாணவ, மாணவிகள் கோலமிட்டு அசத்தினர்.கூடலுார் புனித தாமஸ் ஆங்கில பள்ளியில் பொங்கல் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை நிஷிஜெயசன் தலைமை வகித்து விழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து வண்ண கோலமிட்டு அசத்தினர். அதில், சிறந்த கோலம் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கி பாராட்டினர். விழாவில், பள்ளி ஆசிரியர்கள்; நிர்வாகிகள் பங்கேற்றனர்.