உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ரேஷன் கார்டுதாரருக்கு வழங்க கரும்பு தயார்

ரேஷன் கார்டுதாரருக்கு வழங்க கரும்பு தயார்

மேட்டுப்பாளையம்;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் தாலுகாவில், 72 ஆயிரம் பேருக்கு, கரும்பு வழங்க, 5,350 டன் விவசாய நிலங்களில் அறுவடை செய்து, லாரிகளில் கொண்டு வந்து, ரேஷன் கடைகளில் இறக்கி வைத்து வருகின்றனர்.தமிழக அரசு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய், சர்க்கரை, பச்சை அரிசி, முழு கரும்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையம் தாலுகாவில், 94 முழு நேர ரேஷன் கடைகளும், 22 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன. இதில், 72 ஆயிரத்து, 749 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், பச்சை அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்க, டோக்கன் வழங்கப்பட்டுள்ளன.இன்று முதல் ரேஷன் கடைகளில், பொங்கல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள, 116 ரேஷன் கடைகளுக்கு வழங்க,கரும்புகள், விவசாய நிலங்களில் அறுவடை செய்து, லாரிகளில் ஏற்றி வந்து, அந்தந்த ரேஷன் கடைகளில் இறக்கி வைக்கப்படுகின்றன.ஒரு கட்டுக்கு, 20 கரும்புகள் உள்ளன. அந்தந்த ரேஷன் கடைகளில், காடுகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல், கரும்புகளை லாரியில் இருந்து, பணியாளர்கள் ரேஷன் கடைகளில் இறக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை