மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
19 hour(s) ago
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே குருந்தமலையில் மிகவும் பழமையான, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு, இந்த கோவில் உட்பட்டதாகும். இக்கோவிலில் தைப்பூச தேர்த்திரு விழா இன்று, (18ம் தேதி) கிராம சாந்தி, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.23ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 23ம் தேதி இரவு வள்ளி மலையில் இருந்து, அம்மன் அழைப்பு நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், நடக்கிறது. அன்று இரவு யானை வாகனத்தில், திருவீதி உலா நடைபெற உள்ளது. 25ம் தேதி காலை, 5:50 மணிக்கு புதிதாக செய்த தேருக்கு வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுத சுவாமி எழுந்தருளுகிறார்.அன்று மாலை, 5:00 மணிக்கு புதிய தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. 27ம் தேதி தெப்பத் திருவிழாவும், 28ம் தேதி சந்தன காப்பு உற்சவம் நடைபெற உள்ளது. தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வனிதா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.தைப்பூசம் தேரோட்ட விழாவை முன்னிட்டு, தேர் செல்லும் மலையை சுற்றியும், சுத்தம் செய்து, குளோரின் பவுடர் தெளிக்க வேண்டும் என, தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
19 hour(s) ago
03-Oct-2025