தேயிலை தோட்ட தொழிலாளிகள் பிரச்னை; கூடலுார் அ.தி.மு.க. உண்ணாவிரதம்
கூடலுார்; 'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில் கூடலுாரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் காந்தி திடலில் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, கூடலுார் எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் தலைமை வகித்தார். போராட்டத்தில், 'டான்டீ தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள மருத்துவ விடுப்பு; ஈட்டு விடுப்பு தொகை வழங்க வேண்டும். ஐகோர்ட் உத்தரவுப்படி தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தகுதி அடிப்படையில் கள மேற்பார்வையாளர்களை நியமிக்க வேண்டும்; தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிர்வாக குழு பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்; அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்; தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்; தொழிலாளர்களுக்கு, 10ம் தேதிக்குள் மாத சம்பளம் வழங்க வேண்டும்; வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்; தொழிலாளர்கள் பிரச்னை குறித்து தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகிகள் தோட்டத் தொழிலாளர்கள், கூட்டணி கட்சியான பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.