உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேவை அதிகரிப்பால் ஏற்றம்: காணும் தேயிலை விலை

தேவை அதிகரிப்பால் ஏற்றம்: காணும் தேயிலை விலை

குன்னுார்: நீலகிரி தேயிலை ஏலத்தில் கடந்த, 4 மாதங்களாக சராசரி விலையில் வீழ்ச்சி கண்ட நிலையில் இந்த மாதம் ஏற்றம் காண துவங்கியது. குன்னுார் தேயிலை ஏல மையத்தில் கடந்த, 6, 7 தேதிகளில், இந்த ஆண்டின், 45 வது ஏலம் நடந்தது. 15.96 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 15.02 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த வாரம் கிலோ, 102.38 என இருந்த சராசரி விலை ஏற்றம் கண்டு, 107.93 ரூபாய் என அதிகரித்தது. இலை ரகத்தில் அதிகபட்சமாக, 119.61 ரூபாய், டஸ்ட் ரகத்தில் 109. 71 ரூபாய் என இருந்தது. நடப்பாண்டு ஜனவரி துவக்கத்தில், 128 ரூபாய் என இருந்த சராசரி விலை, கடந்த ஜூன் இறுதியில், 30 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டது. கடந்த, 4 மாதங்களாக, 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்த சராசரி விலை, இந்த மாதம் ஏற்றத்தை காண துவங்கியுள்ளது. நீலகிரியில் தேயிலை வரத்து சற்று குறைந்தாலும், தென் மாநில அளவில் விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. வர்த்தகர்கள் கூறுகையில், 'தற்போது, குளிர்காலம் துவங்கும் நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக தேவை அதிகரிப்பதால் விலையில் ஏற்றும் கண்டு வருகிறது,'என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி