உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம்

கூடலுாரில் ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம்

கூடலுார்; கூடலுாரில் நடந்த ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது.கூடலுாரில், தாலுகா தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டுறவு மற்றும் சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் நடந்தது. செயலாளர் ரோஷினி வரவேற்றார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து, 'சங்கத்தின் செயல்பாடுகள், கடன் திட்டங்கள், உதவி கல்வி திட்டங்கள், சங்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்,' குறித்து விளக்கினார். தொடர்ந்து, சங்கத்தின் வளர்ச்சிக்கு இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கடனுதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, உதவி பொது மேலாளர் சுரேஷ், செயலாட்சியர் ரவிக்குமார், ஒன்றிய செயலாட்சியர் கவுரிசங்கர், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ரமேஷ், சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை