படுக நடனமாடி அசத்திய ஆசிரியர்கள்
குன்னுார்: குன்னுார் ஸ்டேன்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளி முதல்வர் உட்பட ஆசிரியர்கள் படுக நடனமாடி அசத்தினர். குன்னுார் ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா, ஆடல் பாடல் நாடகம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் கிளென் குரோனிங், நிர்வாகி டேனிலா குரோனிங் மற்றும் ஆசிரியர், ஆசிரியர்கள் படுக கலாசார உடை அணிந்து, படுக நடனமாடி அசத்தினர். மாணவ, மாணவியர் ஆரவாரத்துடன் உற்சாகம் அளித்தனர்.