கோவில் திருவிழா துவக்கம்
கோத்தகிரி, ;கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா முதல் நாளில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கோத்தகிரி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஒரு மாதம் காலம் நடக்கிறது. பல்வேறு உபயதாரர்கள் சார்பில் உபயம் நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான விழா நேற்று முன்தினம் (16ம் தேதி) காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 5:00 மணிக்கு கணபதி வேள்வி நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு, மார்கெட் மகளிர் சார்பாக, ராம்சந்த் விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடந்தது. பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.