மேலும் செய்திகள்
சேதமடைந்த சாலையோரம் சீரமைத்தால் பயன்
14-Oct-2024
கூடலுார் : கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் -ஊசிமலை வரை சேதமடைந்ததுள்ள பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்கு பணி துவக்கப்பட்டது. கூடலுார், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், தொரப்பள்ளி முதல் நடுவட்டம் அனுமாபுரம் வரை சாலை சேதமடைந்து காணப்பட்டது. அதில், அனுமாபுரம் முதல் ஊசி மலை வரை, 16 கி.மீ., துார சாலை சீரமைக்கப் பட்டுள்ளது. ஆனால், ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரை, சாலை சீரமைக்கப்படவில்லை. பருவமழையின் போது, சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி சாலைகளில் குழிகள் அதிகரித்து வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரை சேதமடைந்த குழிகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரை, சாலையில் மழையின் போது சேதமடைந்த பகுதிகள் தற்காலிகமாக சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில், இச்சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
14-Oct-2024