உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தற்காலிக கடைகள் பணி நிறைவு: விரைவில் திறக்க ஏற்பாடு

தற்காலிக கடைகள் பணி நிறைவு: விரைவில் திறக்க ஏற்பாடு

ஊட்டி;ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளுக்கான பணிகள் முடிந்ததால் விரைவில் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் முதற்கட்டமாக, 180 புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பழைய கடைகள் இடிக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. புதிய கடைக்கான கட்டுமான பணிகள் முடியும் வரை, வியாபாரிகளுக்கான ஊட்டி ஏ.டி.சி., பகுதியை ஒட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கான அனைத்து வசதிகள் ஏற்படுத்தியதுடன், வியாபாரிகளுக்கான வசதிகளும் நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணிகள் முடிந்ததை அடுத்து விரைவில் தற்காலிக கடைகள் திறக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை