உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 125வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி :பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி

125வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி :பார்வையாளர்களை கவர்ந்த கண்காட்சி

பந்தலுார்;பந்தலுார் அருகே அம்பலவயல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 125 வது ஆண்டு நிறைவு விழா இரண்டு நாட்கள் நடந்தது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரிமளா கொடியேற்றினார். விழா குழு உறுப்பினர் இளையரஞ்சனி வரவேற்றார். விழா குழு துணை தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம கல்வி குழு தலைவர்கள், பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், முன்னாள் வார்டு உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.* இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் விஜேஸ் கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளி நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது. தொல்பொருள், அறிவியல் மற்றும் புகைப்பட, நாணய கண்காட்சிகள் நடந்தது.கண்காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பள்ளி மாணவர்களின் பல்வேறு அறிவியல் படைப்புகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. பழங்குடியின மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்கள், வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சியும் ரசிக்க வைத்தது.தொடர்ந்து, பொதுமக்கள் காண விளையாட்டு போட்டிகளை விழா குழு தலைவர் தாமஸ் துவக்கி வைத்தார். பேட்டிகள் முடிந்த பின்பு,பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.நிகழ்ச்சியில், கல்வி அலுவலர் மகாலிங்கம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஜிஜிஜோன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை