மேலும் செய்திகள்
பேரூரில் 28ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
07-Sep-2025
பந்தலுார்:தேவாலா வேட்டைக்கொருமகன், கோவிலில் விஜயதசமி பூஜையை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தேவாலா பகுதியில் பிரசித்தி பெற்ற வேட்டைக்கொருமகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கடந்த, 9 நாட்களாக நவராத்திரி பூஜை நடத்தப்பட்டு, மகளிர் குழுவினர் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்ததுடன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களின் நாமங்களை பஜனையாக பாடப்பட்டது. இறுதி நாளான நேற்று கோவில் கமிட்டி தலைவர் ஹரிஹரன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பரதநாட்டிய பயிற்சியாளர் பிரசாந்த் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவிகள், டுவிஸா, ஜனனி, ஜெசி, பவிஷ்கா, ராக ஸ்ரீ, யாஷிகா, ஸ்ரீ ராக சுதர்சனா ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டிய நிகழ்ச்சியில் அசத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் சார்பில் ஹரிராமன் செய்திருந்தார். கோவில் கமிட்டி செயலாளர் பிஜூ நன்றி கூறினார்.
07-Sep-2025