உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்தீ பரவலை தடுக்க முதுமலையில் 672 கி.மீ., தீ தடுப்பு கோடுகள் பணிகளை துவக்கிய வனத்துறை

வனத்தீ பரவலை தடுக்க முதுமலையில் 672 கி.மீ., தீ தடுப்பு கோடுகள் பணிகளை துவக்கிய வனத்துறை

கூடலூர்;-முதுமலை புலிகள் காப்பகம் ஊட்டி மற்றும் மசினகுடி கோட்டங்களில் 672 கி.மீ., தூரம் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு, பருவமழை ஏமாற்றியதால், நடப்பு ஆண்டு, கோடைக்கு முன்பாக வறட்சியின் தாக்கம் துவங்கியுள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வறட்சியான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் தொட்டிகளில், வனத்துறையினர் வாகனங்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். வறட்சியில், வனத் தீ அபாயம் உள்ளதால், அதனைத் தடுக்க வனத்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

672 கி.மீ.,க்கு தீத்தடுப்பு கோடுகள்

தேசிய, மாநில நெடுஞ்சாலை வழியாக பயணிக்கும் ஓட்டுநர்கள் சுற்றுலா பயணிகளால் வனத்தீ ஏற்படுவதை தடுக்க, சாலையோரங்களில் செயற்கை தீ மூட்டி தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். வனப் பகுதிகளில் தீ ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்தவும், தீ பரவுவதை தடுக்க, 672 கி.மீ., துாரம், 3 முதல் 6 மீட்டர் அகலத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ