உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பகவதி அம்மன் கோவிலில் விநாயகர் சிலைகளில் கொலு

பகவதி அம்மன் கோவிலில் விநாயகர் சிலைகளில் கொலு

பாலக்காடு; விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கக்கோட்டு பகவதி அம்மன் கோவிலில் விநாயகர் கொலு அமைத்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது. கேரளா மாநிலம், பாலக்காடு பிராயிரி அருகே உள்ளது கக்கோட்டு பகவதி அம்மன் கோவில். இங்கு ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, நேற்று முன்தினம் துவங்கியது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் நவராத்திரி பண்டிகைக்கு 30 விநாயகர் சிலைகள் வைத்து கொலு அமைத்துள்ளது பக்தர்களை கவர்ந்துள்ளது. அரை அடி முதல் ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று மாலை விளக்கு பூஜை நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கஜ பூஜை, யானைகளுக்கு உணவளிக்கும் 'யானையூட்டு' நிகழ்வு, மாலை 4:00 மணிக்கு யானைகள் அணிவகுப்பு, 5:00 மணிக்கு விநாயகர் விசர்ஜன ஊர்வலம், ஆனிக்கோடு அஞ்சு மூர்த்தி கோவில் அருகே நிறைவு பெறுகிறது. தொடர்ந்து ஆற்றில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை