உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனப்பகுதியில் குப்பை கொட்டும் பிரச்னை; பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு

வனப்பகுதியில் குப்பை கொட்டும் பிரச்னை; பேச்சுவார்த்தையில் தற்காலிக தீர்வு

பந்தலுார் : பந்தலுார் அருகே வனப்பகுதியில் குப்பை கொட்டும் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும், சேரம்பாடி பஜாரை ஒட்டிய குழி வயல் மற்றும் சப்பந்தோடு வனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி குடியிருப்புகள் மற்றும் நீரோடை, வனவிலங்குகள் வாழ்விடம் அமைந்துள்ள நிலையில், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை, குழி தோண்டி புதைப்பதால் மண்ணின் இயற்கை தன்மையும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனை கண்டித்து, கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 'சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவித்தனர். தொடர்ந்து, 'பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திரபோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உள்ளிட்டோர், போராட்ட குழு நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அதில், குப்பை கொட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், 'தற்காலிகமாக அங்கு குப்பைகள் கொட்டப்படுவதாகவும், தேர்தல் முடிந்தவுடன் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ