உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு

வெறும் காற்று மட்டுமே வரும் திட்டத்திற்கு 4.5 லட்ச ரூபாய் செலவு

பந்தலூர் அக்.24-: பந்தலூர் அருகே அயனிபிறா பகுதியில், 4.5 லட்ச ரூபாய் செலவு செய்தும், குடி தண்ணீர் கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அமைந்துள்ளது அயனிபிறா கிராமம். இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த, 2022--23ம் நிதியாண்டில் 4.55 லட்ச ரூபாய் செலவில், ஊராட்சி மூலம் குடிநீர் திட்டம் செயல்டுத்தப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய்கள் இணைப்பு தரப்பட்டது. ஆனால் இதுவரை எந்த குழாயிலும் தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சண்முகம் கூறுகையில், அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை, ஊராட்சி நிர்வாகங்கள் பெயரளவிற்கு செயல்படுத்தி உள்ளது. இதனால் அரசின் நிதி விரயமாக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே இந்த திட்டம் குறித்து மத்திய அரசு தனிக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ