மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
11 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
11 hour(s) ago
அன்னூர்: மூடு விழா காண இருந்த அரசு துவக்க பள்ளிக்கு விடிவு பிறந்துள்ளது.அன்னூர் பேரூராட்சியில், காக்காபாளையம் அரசு துவக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். அந்த மாணவரும் வரும் ஏப்ரலுக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளிக்கு சென்றால், பள்ளி மாணவர்களே இல்லாமல் செயல்படும் நிலை ஏற்படும்.இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக காக்காபாளையம் பகுதியில் அரசு பள்ளியில் உள்ள கட்டமைப்பு வசதி உள்ளிட்டவைகள் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவித்தனர்.இதையடுத்து முதல் வகுப்பில், இரண்டு மாணவர்களும், ஒரு மாணவியும், மூன்றாம் வகுப்பில், ஒரு மாணவியையும் சேர்க்க, பெற்றோர் ஒப்புதல் அளித்தனர். ஓரிரு நாட்களில் பள்ளியில் சேர்க்கை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த பள்ளி ஆண்டு விழாவில், கவுன்சிலர் செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பழனிச்சாமி, செல்வராஜ், சண்முகசுந்தரம், கிருஷ்ணசாமி முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பள்ளியில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி முன்மாதிரி பள்ளியாக உருவாக்கவும் முடிவு செய்தனர். இதன் வாயிலாக மூடுவிழா காண இருந்த பள்ளிக்கு விடிவு காலம் பிறந்தது.
11 hour(s) ago
11 hour(s) ago