வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதெல்லாம் புலிகள் காப்பகம்தானே. பின்னே புலி இல்லாமல் வேறு என்ன இருக்கும். முதலில் அங்குள்ள மக்களை அப்புறப்படுத்துங்கள். புலிகள் அதன் இருப்பிடத்தில் சுதந்திரமாக உலா வரட்டும்.
பந்தலுார்: பந்தலுார் அருகே குழிவயல் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய வனத்தில் நான்கு புலிகள் நடமாடியதை, பார்த்த பழங்குடியின மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குழிவயல் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கே, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த, 2- நாட்களுக்கு முன் கிராமத்தில் மகளிர் குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கிராமத்தை ஒட்டிய புல்வெளியில், இரண்டு குட்டிகள் உள்ளிட்ட நான்கு புலிகள் நடமாடியதை பார்த்துள்ளனர். பழங்குடியின மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் சிறுத்தைகள் அடிக்கடி நடமாடி வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதியில், இரண்டு குட்டிகளுடன் நான்கு புலிகள் இந்த பகுதியில் சென்றதை பார்த்து அச்சமடைந்துள்ளோம். இதனால் விறகு சேகரிக்கவும், கிழங்கு மற்றும் கீரைகள் எடுக்கவும் வனப்பகுதிக்கு செல்ல அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வாகன வசதி இல்லாத நிலையில், வெளியிடங்களுக்கு நடந்து செல்ல வேண்டிய நிலையில் வெளியில் செல்வதும் இயலாத காரியமாக மாறி உள்ளது. குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவும் அச்சமாக உள்ளது,' என்றனர்.வனச்சரகர் அய்யனார் கூறுகையில், 'இந்த பகுதியில் சாதாரணமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும். புலி நடமாட்டம் இருந்ததில்லை. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
அதெல்லாம் புலிகள் காப்பகம்தானே. பின்னே புலி இல்லாமல் வேறு என்ன இருக்கும். முதலில் அங்குள்ள மக்களை அப்புறப்படுத்துங்கள். புலிகள் அதன் இருப்பிடத்தில் சுதந்திரமாக உலா வரட்டும்.