மேலும் செய்திகள்
நடைபாதையில் குழிகள்; தடுக்கி விழும் மக்கள்
29-Sep-2025
இன்றைய மின்தடை
14-Oct-2025
குன்னூர்: ஜெகதளா பாலாஜி நகரில் உள்ள தொட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு செய்ய பில்டர் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் பாலாஜி நகர் நல சங்க செயலாளர் சார்லஸ் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொடுத்த மனு: அருவங்காடு அருகே ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் உள்ள தொட்டியில், பில்டர் அமைத்து குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். பாலாஜி நகர் முதல் காரக்கொரை கிராமம் வரை சாலையில் உள்ள குழியால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படுவதால், மழை நீர் வடிகால் வசதியுடன் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
29-Sep-2025
14-Oct-2025