உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வியாபாரிகள் சங்க மூன்றாம் ஆண்டு விழா

வியாபாரிகள் சங்க மூன்றாம் ஆண்டு விழா

கோத்தகிரி; கோத்தகிரியில் தாலுகா வியாபாரிகள் சங்க மூன்றாவது ஆண்டு விழா நடந்தது. சங்க தலைவர் கேசவன் தலைமை வகித்தார். தொடர்ந்து, 'கோத்தகிரியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நகராட்சி நிர்வாகம் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; கோத்தகிரி தாலுகாவில் உள்ள அனைத்து கடைகளுக்கும், திருட்டு சம்பவங்களை கண்காணித்து தடுக்க ஏதுவாக, சி.சி.டி.வி., கேமரா பொருத்துவது, வணிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து, வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் திரளாக பங்கேற்றனர். பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !