மேலும் செய்திகள்
திருவள்ளுவர் சிலை இனி பேரறிவு சிலை: ஸ்டாலின்
30-Dec-2024
ஊட்டி : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி, அரசு தாவரவியல் பூங்காவில் சிலை வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாவட்டங்கள் தோறும் விளையாட்டு போட்டிகள், திருவள்ளுவர் குறித்து கட்டுரை போட்டி, பேச்சு போட்டி வினாடி, வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை போற்றும் வகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில், 6 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணியர் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.
30-Dec-2024