திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா; நுாலகத்தில் சிறப்பு மரியாதை
குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை வளாகத்தில் உள்ள நுாலகத்தில், திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரியில், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு, 25வது ஆண்டு, வெள்ளி விழா கொண்டாடுவதை முன்னிட்டு, அருவங்காடு கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. வாசகர் வட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மூத்த வாசகர் ராஜன் முன்னிலை வகித்தார். 1996ம் ஆண்டு அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை சிறப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. டாக்டர் சதீஷ், ஆனந்தராஜ், ஆறுமுகசாமி, மல்லிகா உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.