உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது

வனத்துறை கேட்டை சேதப்படுத்திய மூவர் கைது

கூடலுார்:முதுமலை, மசினகுடி வன கோட்டம் மாயாறு சாலையில் நேற்று முன்தினம், அதிகாலை மசினகுடி சரக வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது பூதநத்தம் அருகே, சீகூர் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் உள்ள, கேட் சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. வன ஊழியர்கள் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காரை வன ஊழியர்கள் நிறுத்தி, அதில் உள்ளவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள், கேட்டை உடைத்து வனப்பகுதிக்குள் சென்று வருவது தெரியவந்தது. அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.வனச்சரகர் தயானந்தன், காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த ராம்குமார், 23, மற்றும் 19, 20 வயதுடைய மூவரை கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், 'அவர்கள் அதிகாலை நேரத்தில், வனத்துறைக்கு சொந்தமான கேட்டை சேதப்படுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதிக்குள் சென்று, வந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர்கள் அவர்களை கைது செய்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை