உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரும்பு தடுப்புகள் திருட்டு; கூடலூரில் மூவர் கைது

இரும்பு தடுப்புகள் திருட்டு; கூடலூரில் மூவர் கைது

கூடலுார்;கூடலுார் தேவர்சோலை சாலையோரங்களில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை திருடியது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் தேவர்சோலை சாலையில் வளைவான பகுதிகளில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில் இரும்பு பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை சிலர் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு, 5 லட்சம் ரூபாய் ஆகும்.தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பந்தலுார், அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்த சந்தானம், 43, மகாலிங்கம், 71, நெல்லியாளம் ராஜேஷ், 23, ஆகியோர் இவைகளை 'கேஷ் கட்டர்' பயன்படுத்தி அறுத்து திருடி சென்றது தெரியவந்தது.அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட இரும்பு தடுப்புகள், கேஷ் கட்டர், பிக்-அப் ஜீப்பை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை