மேலும் செய்திகள்
ஊட்டி நகர சாலைகளில் கால்நடைகள் உலா
22-Sep-2025
குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை அவ்வப்போது சாலைகளில் உலா வருவதுடன் ஆங்காங்கே அமர்ந்து உணவு அசை போடுகிறது. இந்நிலையில், நேற்று சேலாஸ் சாலையில் படுத்திருந்த காட்டெருமையின் அருகில் சென்ற. 3 பேர் அதன் அருகே அமர்ந்தும், நின்று 'போட்டோ' மற்றும் செல்பி எடுத்துள்ளனர். ஆபத்தை அறியாமல் புகைப்படம் எடுப்பதை, அவ்வழியாக சென்ற சிலர் போட்டோ எடுத்து வனத் துறையினருக்கு அனுப்பினர். இதன் பேரில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், உலிக்கல் நேர்கம்பை பகுதியை சேர்ந்த சந்தோஷ், 27, ஜீவக்குமார், 27, கோபால கிருஷ்ணன்,35, ஆகியோர் என்பது தெரிய வந்தது. மூவருக்கும், 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
22-Sep-2025