உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுார் அருகே விபத்தில் மூவர் காயம்

பந்தலுார் அருகே விபத்தில் மூவர் காயம்

பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் நடந்த சாலை விபத்தில் மூவர் காயமடைந்தனர். பந்தலுார் அருகே பெருங்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். டாக்சி ஜீப் வைத்துள்ள இவர் நேற்று, காலை உப்பட்டியில் இருந்து, பந்தலுாருக்கு பயணிகளை ஏற்றி கொண்டு வந்துள்ளார். அப்போது, பெருங்கரை பகுதியில் எதிரே வந்த, டிப்பர் லாரி மீது மோதியதில் ஜீப் விபத்துக்குள்ளானது. விபத்தில், அத்திமாநகர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி,45, நெல்லியாளம் பகுதியை சேர்ந்த, 14 வயது பெண், டிரைவர் ராஜேந்திரன்,55, ஆகியோர் காயம் அடைந்தனர். மூவருக்கும் பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து காரணமாக, உப்பட்டி- பந்தலுார் இடையே, 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ