சாலையோரம் ஓய்வெடுக்கும் புலி சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
கூடலுார்,: நீலகிரி முதுமலையில் தற்போது நிலவி வரும் மிதமான காலநிலையில், அவ்வப்போது சாலையோரம் புலி ஒன்று வந்து செல்கிறது. இவற்றின் அருகே சில சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'சமீப நாட்களாக, முதுமலை சாலையோரம் ஓய்வெடுக்கும் புலி மனிதர்களை தாக்கும் ஆபத்து உள்ளது. இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் விலங்குகள் அருகே, வாகனங்களை நிறுத்தாமல் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். அதனை மீறி வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால், வனச்சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.