| ADDED : ஜன 28, 2024 11:39 PM
குன்னுார்;குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில், தமிழ் துறை மற்றும் வள்ளலார் அறக்கோட்டம் அமைப்பு சார்பில் திருவருட்பா பாடல் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.அதில், குன்னுார் ஸ்டேன்ஸ் மேல்நிலை பள்ளி, புல்மோர் பள்ளி உபதலை, அட்டடி, வண்டிச்சோலை அரசு மேல்நிலை பள்ளிகள், குன்னுார் கோத்தகிரி மேரீஸ் பள்ளிகளை சேர்ந்த, 64 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் ஷீலா தலைமை வகித்தார். சிறப்பு நடுவராக கோவை அரசு கல்லூரி ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியர் மீனாட்சி பங்கேற்றார். அதில், தனியார் பள்ளிகளுக்கு, 6 பரிசுகளும், அரசு பள்ளிகளுக்கு 8 பரிசுகளும் வழங்கப்பட்டன.புல் மோர் பள்ளி முன்னாள் நிர்வாகி கொலாசா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நினைவுப் பரிசுகளை வழங்கினார்.போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை வள்ளலார் அறக்கோட்ட செயலாளர் சுஜாதா தமிழ் துறை தலைவர் மலர்விழி பேராசிரியைகள் அமுதா, ரேகா ஆகியோர் செய்திருந்தனர்.