மேலும் செய்திகள்
பொங்கல் விடுமுறையில் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்
02-Jan-2025
குன்னுார்; பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மலைரயிலில் பயணம் செய்ய, அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். தற்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு புறப்படும் ரயில், குன்னுார் வந்து பின், 12:00 மணிக்கு ஊட்டியை சென்றடையும். மலை ரயிலில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், தற்போது பொங்கல் விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் காத்திருந்து மலை ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அதில், குன்னுார்- ஊட்டி ரயில்களிலும் கூட்டம் நிரம்பி விடுகிறது.பொங்கல் விடுமுறைக்காக வரும், 16 முதல் 19ம் தேதி வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம்- -ஊட்டி இடையே, 16 முதல் 19ம் தேதி வரை, 4 நாட்கள் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நாட்களில், ஊட்டி- கேத்தி இடையே காலை, 9:45 மணி; காலை 11: 35 மணி; மாலை 3:00 மணி இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு நடந்து வருகிறது.
02-Jan-2025