உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்கா புல்தரை பராமரிப்பு பணி சுற்றுலா பயணிகள் செல்ல தடை

பூங்கா புல்தரை பராமரிப்பு பணி சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்கா பிரதான புல்தரை மைதானத்தில் பராமரிப்பு பணி நடப்பதால், சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் ஏப்.,- மே மாதங்களில் கோடை விழா நடக்கிறது. நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி, பூங்காவில், 270 ரகங்களில், 5 லட்சம் மலர் நாற்றுகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. தொட்டிகளில் பல ஆயிரம் லில்லி மலர்கள், பிற ரக மலர்கள் மலரும் தருவாயில் உள்ளன.தவிர, இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை, பாத்திகளில் பல லட்சம் மலர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் பிரதான புல்தரை மைதானத்தில் காலை, மாலை நேரங்களில் ஸ்பிரிங்ளர் உதவியுடன தண்ணீர் பாய்ச்சப்பட்டு பூங்கா ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பூங்கா வரும் சுற்றுலா பயணிகள் பிரதான புல்தரைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ