மேலும் செய்திகள்
அடுத்தடுத்து இறந்த கால்நடைகளால் அதிர்ச்சி
19 hour(s) ago
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
19 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
19 hour(s) ago
கூடலுார்;முதுமலையில், வறட்சியிலும் பூத்து குலுங்கும் கொன்றை மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதியில் நடப்பாண்டு பனி பொழிவை தொடர்ந்து கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. முதுமலையில் தாவரங்கள் கருகி, மரங்கள் இலைகள் உதிர்ந்து, பசுமை இழந்து வறட்சியின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால், முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வறட்சியான சூழலை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வறட்சியிலும், கொன்றை மலர்கள், கூடலுார் முதுமலை சாலை ஓரங்களில் கொத்துக்கொத்தாக பூத்துள்ளது. வறட்சி நடுவே மஞ்சள் வண்ணத்தில் பூத்துள்ள மலர்கள், இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பாண்டில் இதுவரை கோடை மழை பெய்யாததால் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பசுமை இழந்து வரும் வனத்தின், சாலையோரம் பூத்துள்ள கொன்றை மலர்கள் சற்று ஆறுதலாக உள்ளது,' என்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago