ஊட்டி பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்
ஊட்டி: தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் ஊட்டியில் திரண்டனர். ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா, சூட்டிங் மட்டம், பைக்கார நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று, சுற்றுலா பயணியர் கூட்டம் கணிசமாக அதிகரித்து இருந்தது. மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து, சுற்றுலா பயணியர் மகிழ்ந்தனர்.ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சியை ரசித்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர் அங்குள்ள பிரதான புல் தரை மைதானத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.