ஊட்டி பூங்காவில் கரடியை பார்த்து பயணியர் ஓட்டம்
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று கரடி உலா வந்துள்ளது. கரடி நடமாட்டம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. காலை நேரத்தில் பூங்காவில் நடைபயிற்சி சென்ற பயணியர் கரடியை பார்த்து ஓட்டம் பிடித்தனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவுப்படி, கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக தாவரவியல் பூங்காவில் கரடி உலா வந்ததால், சுற்றுலா பயணியரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.