மேலும் செய்திகள்
கோடை சீசனை முன்னிட்டு மே 1 முதல் ஒரு வழிப்பாதை
19-Apr-2025
ஊட்டி; 'ஊட்டி புறநகர் பகுதி சாலைகள் வழியாக, சுற்றுலா வாகனங்களை திருப்பி விடும் போது, முக்கிய சந்திப்புகளில் அறிவிப்பு பலகைகள் இல்லாததால், பல சுற்றுலா வாகனங்கள் வழிமாறி செல்வதால், உள்ளூர் போலீசாரை நியமிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டியில், கோடை சீசன் துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை தொடரும் என்பதால், திங்கள் முதல் வெள்ளி, 6 ஆயிரம், வார நாட்களில், 8 ஆயிரம் வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதனுடன் கூடுதலாக தேவைப்பட்டால், 500 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்தில் மாற்றம்
மேலும், கடந்த, 3ம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒரு வழிப்பாதை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் குஞ்சப்பனை வழியாகவும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மேல் நோக்கி வரும் வாகனங்கள் பர்லியார் வழியாகவும் ஊட்டிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் பற்றாக்குறை காரணமாக, ஒரு வழிப்பாதை நடைமுறையிலும், வார இறுதி நாட்களில் போலீசார் திணறி வருகின்றனர். ஊட்டி நகரில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க வரும் நாட்களில், தற்போது உள்ளதை விட கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அவஸ்தை
இந்நிலையில், ஊட்டி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், புறநகர் பகுதிகளில் உள்ள சாலை வழியாக சுற்றுலா மையங்களுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, குன்னுாரில் ஊட்டிக்கு வரும் வாகனங்கள், லவ்டேல் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, மஞ்சனக்கொரை, பர்ன்ஹில் சந்திப்பு வழியாக வரவும்; தலைகுந்தா வழியாக வரும் வாகனங்கள், குழிச்சோலை வழியாக, ஊட்டி நகருக்குள் செல்லும் வகையில் திருப்பி விடப்படுகின்றன. இப்பகுதியில், முக்கிய இடங்களில் பல மொழிகளில் அறிவிப்பு பலகைகள் இல்லை.மேலும், சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில், உள்ளூரை சேர்ந்த அனுபவம் வாய்ந்த போக்குவரத்து போலீசாரும் நிறுத்தப்படுவதில்லை. இதனால், இப்பகுதிகளில் குழப்பம் அடையும் சுற்றுலா பயணிகள், மஞ்சனகொரை வழியாக முத்தோரை பாலாடவுக்கும்; குழிசோலை வழியாக, கோத்தகிரி அருகே உள்ள கிராமங்களுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு சேர்ந்த பின்பு, உள்ளூர் மக்கள் உதவியுடன், பல மணி நேர தாமதத்துக்கு பின்பு, ஊட்டிக்கு வருகின்றனர். கிராமங்களில் இருந்து, சிலர் 'கூகுள் மேப்' பயன்படுத்தினாலும், வெவ்வேறு பகுதிகளை காட்டுவதால் பயணியர் அவஸ்தை அடைகின்றனர். 'இந்த குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், கோடை சீசன் முடியும் வரையில் சுற்றுலா வாகனங்கள் வரும் முக்கிய சந்திப்புகளில் உள்ளூர் போலீசாரை நியமிக்க வேண்டும்,' என, வலியு றுத்தப்பட்டுள்ளது.
ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் கூறுகையில்,''கோடை சீசனை ஒட்டி சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமமின்றி வந்து செல்லும் வகையில், நகரில் கூடுதல் போலீசார் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகரில் மாற்று பாதையில் திருப்பிவிடும் சுற்றுலா வாகனங்கள் சரியான பாதையில் செல்ல ஆங்காங்கே உள்ளூர் போலீரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
19-Apr-2025