உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்

ஊட்டி;ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு இரண்டு நாட்களில், 22 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் திரளாக வந்து செல்கின்றனர். தற்போது, சனி மற்றும் ஞாயிற்றுகிழமையை ஒட்டி பூங்காவில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அங்குள்ள பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தாருடன் நடனமாடி மகிழ்ந்தனர். தவிர, நேற்று உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் பூங்காவுக்கு வந்திருந்தனர். இரண்டு நாட்களில், 22ஆயிரம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ