ஊட்டியில் புகைப்பட கண்காட்சி பார்வையிட்ட சுற்றுலா பயணியர்
ஊட்டி : ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி துவங்கியது. கோடை சீசனின் போது, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீலகிரி வனத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சி பழங்குடியினர் பண்பாட்டு மைய அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் இயற்கை சார்ந்த புகைப்படங்கள், இங்கு வாழும் பழங்குடியின மக்கள், நீலகிரியில் மட்டும் காணப்படும் தாவரங்கள், பூக்கள் மற்றும் விலங்குகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.கண்காட்சியை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார். நீலகிரி வனத்துறை வன அலுவலர் கவுதம் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். ஏளமான சுற்றுலா பயணியர் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர்.