உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  டேன்டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் வலியுறுத்தல்

 டேன்டீ தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொழிற்சங்கம் வலியுறுத்தல்

கோத்தகிரி: -கோத்தகிரி டேன்டீ தொழிலாளர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வெற்றிவேல் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கோத்தகிரி டேன்டீ தொழிலாளர்களுக்கு, ஜூலை 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு மற்றும் பண பலன்கள் வழங்க, உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்த பரிந்துரை படி, உடனடியாக வழங்க வேண்டும். பணியின் போது, விபத்து, விஷ ஜந்து, வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட, 6 பேர் பல மாதங்களாக இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நிலமையை கருத்தில் கொண்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், விருப்ப ஓய்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள, இரண்டு டேன்டீ தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை