உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / போக்குவரத்து நெரிசல்:சுற்றுலா பயணிகள் அதிருப்தி

போக்குவரத்து நெரிசல்:சுற்றுலா பயணிகள் அதிருப்தி

கூடலுார்;கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், நடுவட்டம் ஊசி மலையிடையே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வடிகால் அமைக்கும்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், அனுமாபுரம் ஊசிமலை வரை சாலை. சாலை அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மண் சரிவை தடுக்க, தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் செல்லவடிகால் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.பெரும்பாலான இடங்களில் வடிகால் பணிகள் முடிந்த நிலையில், தற்போது நடுவட்டம் - ஊசி மலை இடையே, சாலை குறுக்கே வடிகால் அமைக்கும் பணி நடந்தது.பணிகள் நடைபெறும் பகுதியில், வாகனங்களை நிறுத்தி, காத்திருந்து கடந்து செல்ல வேண்டி உள்ளது. அரசு விடுமுறை நாட்களில், வெளி மாநில சுற்றுலா பயணிகள் இவ்வழியாகவே, வாகனங்களில், ஊட்டிக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர்.வடிகால் பணிகள் நடைபெறும் பகுதியில், நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டி உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.அதில், வார இறுதி நாட்களில் இரவு இச்சாலையில் கடும் போக்கு நெரிசல் ஏற்பட்டதால், ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரம் காத்திருந்து இச்சாலையை கடந்து சென்றனர். கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலை அகலப்படுத்தி சீரமைப்பது வரவேற்க கூடியது. ஆனால், வடிகால் அமைக்கும் பணியினால் வாகனம் போக்குவரத்துக்கு, குறிப்பாக விடுமுறை நாட்களில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் சிரமத்திற்கு ஆளாக வேண்டி வரும். எனவே, இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி