உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேர்வான ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி

தேர்வான ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி

கூடலூர்: -கூடலூர், பந்தலூர் போலீஸ் சப் -- டிவிஷனில் தேர்வு செய்யப்பட்ட 10 பெண்கள் உட்பட 40 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து வருகின்றனர். கூடலூர், பந்தலூர் சப் -- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஊர்காவல் படைக்கு 10 பெண்கள் உட்பட 40 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி மைதானத்தில், 45 நாள் பயிற்சி முகாம் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. போக்குவரத்து எஸ்.ஐ., பிலிப்ஸ் சார்லஸ், எஸ்.எஸ்.ஐ., நாகராஜ் ஆகியோர் தினமும் காலை, 8:00 மணி முதல், 9:30 மணி வரை பயிற்சி அளித்து வருகின்றனர். முகாமில், ஊர்க்காவல் படையினருக்கு உடற்பயிற்சி, ஒதுக்கப்படும் பணிகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீசார் கூறுகையில், '1ம் தேதி துவங்கிய பயிற்சி முகாம், 45 நாட்கள் நடைபெறுகிறது. அதிகாரிகள் உத்தரவுப்படி, ஊர்க்காவல் படை இதற்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை